Editorial / 2023 நவம்பர் 02 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

இராணுவ வீரரான தன்னுடைய கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டி பலத்த காயங்களை ஏற்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மனைவி 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுர பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய நாலக சஞ்ஜீவ ஜயசூரியவே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான பெண்ணை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மனநல வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துமாறும், உரிய மருத்துவ அறிக்கையை எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பிரதான நீதவான் பொலிஸாருக்கு மேலும் உத்தரவிட்டார்.
பகலில் தனது கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது சந்தேக நபர் அவரது ஆணுறுப்பை கத்தியால் அறுத்து பலத்த காயம் அடைந்தார். பின்னர் காயமடைந்தவர் 1990 சுவாசரி அம்புலன்சில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025