Editorial / 2026 ஜனவரி 23 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ விரும்பிய பெண் ஒருவர் பிரியாணியில் தூக்க மருந்து கலந்து கொடுத்த நிலையில் அவர் மயங்கவே கள்ளக்காதலனை வரவழைத்து கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு விடியவிடிய ஆபாசபடம் பார்த்த சம்பவம் நடந்துள்ளது. இந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் குறித்து தெரியவருவதாவது
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுவூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகம் சிவநாகராஜு (வயது 45). இவரது மனைவி பெயர் லட்சுமி மாதுரி. இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளன. லோகசம் சிவநாகரஜு பல்லாரி வியாபாரம் செய்து வந்தார்.
மாதுரி தியேட்டரில் வேலை செய்து வந்தார். அப்போது தியேட்டருக்கு அடிக்கடி வந்த கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
கோபி டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இதனால் கோபியையும், மாதுரி தனது கணவர் லோகம் சிவநாகராஜுவிற்கு அறிமுகம் செய்தார். அதோடு லோகம் சிவநாகராஜுக்கும் டிரைவிங் தெரியும் என்பதால், அவரை தனது கம்பெனியில் வேலைக்கு சேர்த்து கொண்டார். அதேவேளையில் கோபியும், மாதுரியும் கள்ளக்காதலை தொடர்ந்தனர். இதற்கிடையே தான் லோகம் சிவநாகராஜுவுக்கு இருவரின் கள்ளக்காதலும் தெரியவந்தது. இதனால் அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் இருவரும் கள்ளக்காதலை கைவிடவில்லை.
இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவர் லோகம் சிவநாகராஜுவை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். சம்பவத்தன்று இரவில் கணவனுக்கு பிடித்த பிரியாணியை சமைத்த மாதுரி, அதில் தூக்க மாத்திரைகளை பொடியாக்கி கலந்தார். பிரியாணியை ருசித்து சாப்பிட்ட லோக்ம் சிவநாகராஜு ஆழ்ந்து தூங்கினார்.
இதையடுத்து இரவு 11:30 மணிக்கு கள்ளக்காதலன் கோபி வீட்டுக்கு சென்றார். லோகம் சிவநாகராஜுவின் மார்பில் ஏறி கோபி உட்கார மாதுரி தனது கணவரின் முகத்தை தலையணையால் அழுத்தினார். இதில் மூச்சு விட முடியாமல் அவர் இறந்தார். லோகம் சிவநாகராஜு உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது. அவர் இறந்து விட்டதை உறுதி செய்ததும், கோபி அங்கிருந்து சென்றார்.
இதையடுத்து கொலையை மறைக்க மாதுரி முடிவு செய்தார். இதனால் எதுவும் நடக்காதது போல் தனது கணவர் லோகம் சிவநாகராஜுவை வீட்டில் படுக்க வைத்தார். பிறகு அதிகாலையில் முதல் ஆளாக எழுந்து தனது கணவன் மாரடைப்பால் இறந்ததாக கூறி ஊரை நம்ப வைக்க அவர் திட்டமிட்டார். இதனால் அவர் இரவில் தூங்காமல் இருக்க முடிவு செய்தார்.
இதற்காக அவர் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்தார். கணவர் இறந்து விட்ட துக்கமோ, அவரை கொன்ற குற்ற உணர்ச்சியோ இன்றி விடியவிடிய அவர் தனது கணவர் லோகம் சிவநாகராஜுவின் உடலின் அருகே இருந்து ஆபாசபடம் பார்த்தார். பிறகு அதிகாலை சுமார் 4 மணியளவில் பக்கத்து வீட்டுக்கு அழுதபடி சென்ற மாதுரி, எனது கணவர் இறந்துவிட்டார். மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று கூறினார்.
ஆனால் லோகம் சிவநாகராஜுவின் தந்தை மற்றும் நண்பர்களுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் உடனடியாக அவரது உடலை பார்த்தனர். அப்போது உடலில் ஆங்காங்கே கீறல் காயம் ரத்தத்துடன் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் பொலிஸூக்கு தகவல் தெரிவித்தனர். பொலிஸார் அவரது உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும் மாதுரியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் நடந்த சம்பவத்தை அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். தனது கணவர் மாரடைப்பால் இறக்கவில்லை. கள்ளக்காதலன் கோபியுடன் சேர்ந்து கொன்றதை ஒப்புக்கொண்டார். அதேபோல் சம்பவத்தன்று இரவில் அவர் விடிய விடிய ஆபாசபடம் பார்த்ததும் அவரது செல்போன் மூலமாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த பொலிஸார், மாதுரி மற்றும் அவரது கள்ளக்காதலன் கோபியை கைது செய்தனர். இந்த சம்பவம் ஆந்திராவை அலற வைத்துள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago