2025 மே 02, வெள்ளிக்கிழமை

கண்டியில் பல பாடசாலைகள் இன்று முதல் மூடப்படுகின்றன

Freelancer   / 2025 ஏப்ரல் 21 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும் ஸ்ரீ தலதா புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் ஸ்ரீ தலதா வழிபாட்டின் நான்காவது நாள் இன்று (21) ஆகும்.  

இதை முன்னிட்டு கண்டி நகர எல்லைக்குட்பட்ட பல பாடசாலைகளுக்கு இன்று முதல் 25 ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலதா மாளிகை யாத்திரைக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நாட்களின் எண்ணிக்கை நீட்டிக்கப்பட்டால், அந்தப் பாடசாலைகளின் விடுமுறை நாட்களும் அதிகரிக்கும் என மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கண்டி நகரின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் முப்படையினரை தங்க வைப்பதற்காக இந்தப் பாடசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, இந்தப் பாடசாலைகள், யாத்திரைக்கு வருகை தரும் அங்கவீனவர்கள் மற்றும் முதியவர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .