2025 மே 01, வியாழக்கிழமை

பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் வெளியான தகவல்

Freelancer   / 2025 மே 01 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு பகிடிவதையே காரணமென, அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 

அதன்படி, இந்த மாணவரின் தற்கொலைக்குக் காரணம் பகிடிவதையா? என்பது தொடர்பில் கண்டறிவதற்காக தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். 

பகிடிவதை என்பது குற்றவியல் குற்றம் என்பதால், யாரேனும் பகிடிவதையில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .