Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மே 15 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்சரிவு மற்றும் மரம் விழுந்தமையினால் கண்டி மற்றும் காலி ஆகிய வீதிகளின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி, தெல்தோட்ட வீதியில் 9ஆவது மைல்கல்வுக்கு அண்மையிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு மேலே, சுமார் 20 குடும்பங்கள் வசித்துவருவதாகவும், அப்பகுதியிலும் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க காலி-கொழும்பு பிரதான வீதியில், மொரகல்ல எனுமிடத்தில் மரமொன்று விழுந்ததில், அவ்வீதியின் ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இவ்விரு வீதிகளிலும் பயணிக்கும் சாரதிகள், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago