Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 23 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி நகரசபையின் சுயேச்சைக்குழு உறுப்பினர் முஹம்மது பாறூக் கலீல்பாரி காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாநாயகா தெரிவித்தார்.
அவருடன் அவரது சுயேற்சைக்குழுவில் அவரது அணியில் போட்டியிட்ட முஹமட சிராஜ் மற்றும் ஆதரவாளரான நாசர் ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காத்தான்குடி நகர சபைக்கு சொந்தமான வடி கான் மூடியொன்றை நகர சபையின் அனுமதியின்றி கையாண்டார்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago