2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

தலையிலா நிறுத்துவது: அர்ச்சுனா கைது

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று காலை சென்ற பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியமையையடுத்து புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரியொருவரை அவதூறுக்குள்ளாக்கியதாக காணொளிகள் வெளியாகிய சம்பவத்தையடுத்தே இக்கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விசாரணையொன்றின் அங்கமொன்றாகவே கைது இடம்ம்பெற்றதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.  

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் வந்த வாகனத்தை, பாதசாரிகள் கடவையில் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த போக்குவரத்து பொலிஸார், வாகனத்தை இவ்விடத்தில் நிறுத்தக்கூடாது என கூறியுள்ளார்.

அப்போது, வாகனத்தை இங்கு நிறுத்தாமல் உங்கள் தலையிலா நிறுத்துவது என அர்ச்சுனா கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X