2026 மே 13, புதன்கிழமை

காதலித்தவன் துரோகம்: கேரளாவில் தவிக்கும் இலங்கை இளம்பெண்

Mayu   / 2026 மே 13 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், கேரளாவின் கணியாபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் வளைகுடா நாடு ஒன்றில் பணிபுரிந்தபோது காதலித்து வந்துள்ளனர். சுமார் 8 மாதங்கள் இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில், அந்தப் பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயன்ற அந்த இளைஞர், காதலியைக் கைவிட்டுவிட்டு ரகசியமாகக் கேரளாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.

தனது காதலனைத் தேடி கேரளா வந்த அந்தப் பெண்ணுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காதலித்த இளைஞனுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. மேலும், அந்த இளைஞனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அப்பெண்ணை மிரட்டித் தனிமைப்படுத்தியுள்ளனர்.

தான் வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண், கழக்கூட்டம் பொலிஸ் நிலைய வளாகத்தில் கதறி அழுது, மன அழுத்தத்தால் நிலைகுலைந்து போயுள்ளார். அவரது மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள 'ஊளம்பாறை மனநல மருத்துவ மையத்தில்' அனுமதித்துள்ளனர்.

இதற்கு முன்பும் குறித்த பெண் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டு, கட்டாயமாக கருக்கலைப்பு செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது முறையான புகார் அளிக்க ஆளில்லாத காரணத்தால், பொலிஸார் வழக்குப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சட்ட உதவி பெறவோ அல்லது மீண்டும் தாயகம் திரும்பவோ வழியில்லாமல் அநாதை நிலையில் தவிக்கும் அந்தப் பெண்ணுக்கு, இலங்கைத் தூதரகம் மற்றும் மகளிர் அமைப்புகள் முன்வந்து உதவ வேண்டுமெனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை, தலைமறைவாக உள்ள அந்த இளைஞன் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் எழுந்துள்ளன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .