Editorial / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் ஒரு வீடியோவில், ஒரு பெண் 10-வது மாடி பால்கனியில் குதித்து தொங்கியடி, தப்பி ஓடுவது போன்ற காட்சி தெரிகிறது. இதை பார்த்தால் இதயத்துடிப்பு கூட அதிகரிக்கிறது. இந்த சம்பவம் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
வீடியோவில், சட்டையில்லாத ஒரு ஆண் ஜன்னல் வழியாக அந்த பெண்மணியிடம் சிறிது நேரம் பேசியதை காணலாம். சில நொடிகளில் அவர் காட்சியில் இருந்து மறைந்துவிடுகிறார். இந்த சம்பவம் நவம்பர் 30-ஆம் தேதி நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வீடியோவில் இருக்கும் பெண்மணியுடன் கணவன் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அவரது மனைவி எதிர்பாராத விதமாக திடீரென வீட்டிற்கு விரைவாக வந்ததால் பீதியடைந்த கணவர், தன்னை மனைவி கண்டுபிடிக்காதவாறு இருக்க, அந்த பெண்மணியை பால்கனிக்கு ஏறி வெளியே நிற்கச் சொல்லியதாக கூறப்படுகிறது.. பின்னர் அந்த பெண், பால்கனியில் இருந்து தொங்கியபடியே இறங்கி மற்றொரு வீட்டின் ஜன்னல் வழியாக உதவி கேட்கிறார். உள்ளே இருந்த நபர் அந்த பெண்ணை பத்திரமாக காப்பாற்றுவதை பார்க்க முடிகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகும் அந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஒருவர், “அவர் ஸ்பைடர்மேன் குழுவில் உள்ளவர் போல இருக்கிறார் என்று நகைச்சுவையாகக் கருத்து பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பயனர், “ப்ளாட் ட்விஸ்ட்: அவளை காப்பாற்றும் நபர், அந்த மனிதனின் மனைவியிடம் ‘சரி, அவள் இங்கே இருக்கிறாள்’ என்று சொல்லி இருப்பார் என்று கிண்டலாக குறிப்பிட்டார். மூன்றாவது பயனர், அந்த பெண் இதுபோன்ற அனுபவம் கொண்டவரை போல தெரிகிறார் என்று பதிவிட்டார். மற்றொருவர், ஒரு ஆணுக்காக இப்படிப் பட்ட அவமானகரமான நிலைக்கு நீ உன்னை தள்ளிக் கொள்ள கூடாது. கொஞ்சம் மரியாதை வைக்கவும், மிஸ்…என்று அறிவுறுத்தும் கோபத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
@chdgh51 Mistress Narrowly Escapes Death Hiding From Lover's Wife on 10th-Floor Window #10thFloorHidingHorror #MistressNearDeathincident #ExtramaritalAffairDrama #EmergencyRescueStory ♬ original sound - chdgh51
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago