2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

காதலை மறுத்த ஆசிரியைக்கு ஷொக் கொடுத்த இளைஞன்

Editorial   / 2026 ஜனவரி 05 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியையான யுவதியுடன் சிறிதுகாலம் காதல் தொடர்பில் இருந்ததன் பின்னர், அந்த காதலனை அந்த ஆசிரியை மறுத்தமையால், அவ்விளைஞன் ஆசிரியைக்கு ஷொக் கொடுக்கும் வகையில் சம்பவமொன்றை செய்துள்ளார்.

இந்த சம்பவம், களுத்துறை பிரதேசத்தில்இடம்பெற்றுள்ளது.  காதலுக்கு மறுப்பு தெரிவித்தமையினால் கோபமடைந்த இளைஞன் ஆசிரியையின் 64,000 ரூபாய் மதிப்புள்ள கைப்பேசியை அபகரித்துச் சென்றுள்ளார்.

 கைப்பேசி தொடர்பில் களுத்துறை, நாகொடையைச் சேர்ந்த 24 வயது ஆசிரியை வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி, விகாரைக்கு செல்ல மதுகம நகருக்கு பேருந்தில் வந்தபோது சந்தேகநபர்,கைப்பேசியை பறித்து தப்பிச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியை உடலில் ஏற்பட்ட கீறல்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபர் வந்த மோட்டார் சைக்கிள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை கைது செய்ய மதுகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .