Freelancer / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வாணிப நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் மரணமடைந்துள்ளார்.
ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட வாணிப நிலையத்திற்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ளார்கள். அப்போது கடை உரிமையாளர் மிக்சர் குரிய பணத்தை தருமாறு கேட்டபோது மிக்சரை வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளர்களுடைய வாய் தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது கடை உரிமையாளர் மீது மிக்ஸர் வாங்க வந்தவர்கள் கத்திக்குத்தை மேற்கொண்டுள்ளார்கள். இதன்போது கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த சிங்காராவேல் தானவன் வயது 35 என்பவரே உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவரின் சடலம் தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுளளது
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுண்ணாகம் பொலிசார் கைது செய்துள்ளனர்
சம்பவப் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். (a)
31 minute ago
36 minute ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago
6 hours ago
8 hours ago