2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

கனிமொழியை சந்தித்தார் உயர்ஸ்தானிகர் மொரகொட

Freelancer   / 2022 ஓகஸ்ட் 06 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தமிழ்நாடு தூத்துக்குடி தொகுதி மக்களவை எம்.பியான  கனிமொழி கருணாநிதியை டெல்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் போது இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு செய்துவரும் மனிதாபிமான உதவிகளுக்கு இலங்கை சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையிலான மிக நெருக்கமான இன, மத மற்றும் கலாசார தொடர்புகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டுதுடன் அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .