2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்தவர் கைது

Freelancer   / 2025 மே 17 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகபட்டினத்தில் இருந்து வருகை தந்த சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் 4 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருளை சூட்சுமமாக உடமையில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.

சோதனையில் சுங்க அதிகாரிகள் அதனைக் கண்டுபிடித்துக் கைப்பற்றினர்.

போதைப்பொருளைக் கடத்தி வந்தவரைக் கைது செய்த சுங்கத் திணைக்களத்தினர், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அவரைக் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X