2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

கப்பலை உடனடியாக அப்புறப்படுத்துமாறு பணிப்பு

Editorial   / 2019 ஜூலை 28 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூமஸ்ஸல கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ள, சரக்குக் கப்பலை குறித்த இடத்திலிருந்து விரைவாக, அப்புறப்படுத்துமாறு, குறித்த கப்பலுக்குரிய நிறுவனத்திடம் பணித்துள்ளதாக, கடற் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் நிறைவேற்றதிகாரி டர்னி பிரதீப் தெரிவித்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி காலி கடற்பரப்பில் வீசிய கடுங்காற்றினால் பாதிப்படைந்த குறித்த கப்பல், ரூமஸ்ஸல கடற்பரப்புக்கு காற்றினால்  இழுத்துச் செல்லப்பட்டது.

இதனையடுத்து, குறித்த கப்பலிளுள்ள எரிபொருள் கசிவு ஏற்பட்டால், அது சுற்றாடலுக்கும், பவளப்பாறைகளுக்கும் அழிவை ஏற்படுத்தும் என்பதால், கப்பலிலிருந்த எரிபொருள்களை அகற்றும் நடவடிக்கை கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கப்பலை குறித்த இடத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .