2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கம்பஹா துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை

Freelancer   / 2025 ஏப்ரல் 16 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சிறிய லொரி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் சிறிய லொரியில் பயணித்த 2 பேர் வாகனத்தில் இருந்து இறங்கி அருகிலுள்ள கடைக்குள் ஓடியுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்றும், லொரிக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X