2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கம்​​போடிய பிரதமரின் இலங்கை விஜயம் இரத்து

George   / 2016 நவம்பர் 29 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்​​போடிய பிரதமர் ஹுன் சேன், இலங்கை உள்ளிட்ட  ஏனைய மூன்று நாடுகளுக்கு மேற்கொள்ளவிருந்த உத்தி​யோகபூர்வ விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதனை, கம்போடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் செனட் தலைவர் மியன் ராசா ரப்பானியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து,  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவில் மேற்கொள்ளவுள்ள முக்கிய பணிகளை நிறைவுசெய்ய வேண்டிய தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் வரடத்தில் அந்நாட்டில் சில தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் வேலைப்பளு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

கம்போடிய பிரதமர், இலங்கை, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வதற்கு தீர்மானித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .