2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

கையேந்த தயாரில்லை: ஜனாதிபதி

Freelancer   / 2022 நவம்பர் 24 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தாம் ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை கூறினார். 

இலங்கையர்களாக நாம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் இவ் வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .