Editorial / 2025 டிசெம்பர் 16 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

"ஒரு தாயின் பொறுப்பு, குழந்தையை வயிற்றில் சுமப்பது மட்டுமல்ல. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதும் மிகவும் முக்கியம். மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளபடி, தாயின் மகிழ்ச்சி மற்றும் மன நலம், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியையும் எதிர்கால ஆளுமையையும் நேரடியாகப் பாதிக்கிறது. நீங்கள் பதற்றமாக இருந்தால், அது குழந்தையை மோசமாக பாதிக்கும்" என பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.
"இலங்கையில் ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டுத் துறையை எல்லா வகையிலும் மேம்படுத்த நாங்கள் நம்புகிறோம் எந்தவொரு சவாலான சூழ்நிலையிலும், தாய் மற்றும் குழந்தை மீது முதலீடு செய்ய அரசாங்கம் ஒருபோதும் தயங்காது என்றார்.
டிசம்பர் மாதத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்கும் தொடக்க விழா வெள்ளவத்தை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பேரிடர் சூழ்நிலை மற்றும் வரவிருக்கும் பண்டிகை காலத்தின் அடிப்படையில் வழங்கப்படும் இந்தக் கொடுப்பனவு, ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டுக்கான தேசிய செயலகத்தின் ஒரு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
2025நவம்பர் 30, க்கு முன்னர் மகப்பேறு மருத்துவமனைகளில் பதிவுசெய்யப்பட்ட தாய்மார்கள் மற்றும் நான்கு மாதங்களுக்கு மிகாமல் குழந்தைகளைக் கொண்ட பாலூட்டும் தாய்மார்கள் இந்த ஒரு முறை கொடுப்பனவைப் பெற உரிமை உண்டு.
5 minute ago
14 minute ago
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
18 minute ago
28 minute ago