2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கருணாவுக்கு எதிரான ரிட் மனு விசாரணையின்றி நிராகரிப்பு

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதியமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனைக் கைதுசெய்ய உத்தரவிடுமாறு கோரி,  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடுவல நகர சபையின் உறுப்பினரான, போசத் கலஹபதிரனவால் தாக்கல் செய்யப்பட்ட மனு​வே ​இன்று (21) நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஒரே இரவில் 3,000 இராணுவத்தின​ரைக் கொன்றதாக, கருணா அம்மான் கருத்து தெரிவித்திருந்தமை தொடர்பில், அவரைக் கைதுசெய்யுமாறு கோரியே குறித்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .