A.K.M. Ramzy / 2021 மே 20 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தூத்துக்குடி:
கோவில்பட்டி அருகே கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பட்டறை உரிமையாளர் இன்று (20) உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கரும்பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கரும்பூஞ்சை நோயின் பாதிப்பு தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நோயின் தாக்கத்தால் தமிழகத்தில் முதல் பலி பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த 57 வயதான வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 17ஆம் திகதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று (மே 20) உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .