Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரி.பாருக்தாஜுதீன்
கருணா அணியின் அழுத்தம் காரணமாகவே, பொலிஸாரிடம் தான், மாற்றி மாற்றி வாக்குமூலம் கொடுத்ததாக, யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்சியான டப்ளியு.எம்.எம்.சஞ்சய பிரித் விராஜ் தெரிவித்தார். இந்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேயின் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகள் இருவரின் சட்டத்தரணிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சாட்சியான டப்ளியூ. டப்ளியூ.எம். சஞ்சய பிரித் விராஜ் மேற்கண்டவாறு கூறினார்.
அரச சாட்சியான பிரித் விராஜ், புலனாய்வுப் பிரிவினருக்கு 2008ஆம் ஆண்டு மே 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் இரு தடவைகள் சாட்சியமளித்துள்ளார். இரண்டு சாட்சிகளும் முரண்படுகின்றன. இதிலிருந்து, அவரது நேர்மைத்தன்மை கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது என்று பிரதிவாதியின் சட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
தான், இரண்டு வாக்குமூலங்களை வழங்கிய போதும், அவ்வேளைகளில் உயிருக்குப் பயந்து உண்மையைக் கூறவில்லை என அரச சாட்சி கூறினார்.
இருப்பின் நாட்டின் நிலைமை மாறிவிட்டதால், 2015இல், புலனாய்வாளர்களுக்கு தான் உண்மையைக் கூறியதாகக் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பில், நான்கு கடற்படையினர், கருணா அணியைச் சேர்ந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவர் உட்பட ஏழு பேருக்கு எதிராக, சட்டமா அதிபர், வழக்குத்தாக்கல் செய்திருந்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago