2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி

Freelancer   / 2025 ஜூலை 15 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .