2025 டிசெம்பர் 12, வெள்ளிக்கிழமை

கல்முனை விபத்தில் 650 கோழிகள் உயிரிழப்பு

Editorial   / 2025 டிசெம்பர் 12 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பில் கோழிகளை ஏற்றிவந்த லொறி வீதியின் நடுவே படுத்திருந்த கட்டாக்கில் மாடுகளுடன் மோதியதில் லொறி தடம் புரண்டதால் லொறியிலிருந்த 650 கோழிகளும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்ப புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று ( 12) அதிகாலை 4.30 மணியளவில் கோழி ஏற்றிவந்த கப் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கோழிகளை ஏற்றிக்கொண்டு மட்டு கல்முனை சாலை வழியே கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனம் புதுக்குடியிருப்பு பகுதியூடாக பயணிக்கும் போது வீதியில் நின்ற மாட்டுடன் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்தில் சிக்கிய மாடு சம்பவ இடத்தில் உயிரிழந்ததோடு கோழிகளும் இறந்துள்ளன. இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X