2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

கல்விக் கல்லூரிகளை திறக்குமாறு பணிப்பு

Freelancer   / 2022 ஜனவரி 14 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளை நாளை (15) முதல் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள், தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தப்பட்டன.

நாளை மீண்டும் திறக்கப்படும் மேற்படி கல்லூரிகளின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (18) ஆரம்பிக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

கொரோனா தொற்றுநோய் வேகமாகப் பரவியதால் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 திகதியன்று இந்தக் கல்லூரிகள் மூடப்பட்டு தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தப்பட்டன.

குறித்த கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .