Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 06 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
கல்வித்துறையில், அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு, சில நடமுறைகளின் கீழேயே, நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், “இத்துறையில் சுமார் 12 ஆயிரம் பேர், அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ளனர்” என்றார். நாடாளுமன்றத்தில் நேற்று (05) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஹேஷா விதானகே எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதில், 1,018 பேருக்குத் தரமுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக, அரச சேவைகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கிடைத்துள்ளது” என்றார்.
தகுதியற்றவர்களுக்கு தரமுயர்வுகள் வழங்கப்படவில்லை. இது குறித்து ஏதாவது பிரச்சினைகள் காணப்படின், அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்று தெரிவித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாமென அதிபர், ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதன்போது, பார்வையாளர் கலரியில், பாடசாலை மாணவர்கள் நிறைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
32 minute ago
46 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
46 minute ago
47 minute ago