Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் அனைத்து ஆசிரியர் சபை ஊழியர்களையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்துவதற்காக, தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 'சுபீட்ச தொலைநோக்கு' என்ற கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட அறிவைக்கொண்ட சமூகம் ஒன்றுக்கான வேலைத்திட்டத்தின் கீழ், ஆசிரியர்களின் தொழில் தரத்தை மேம்படுத்துவதற்கும், இலங்கையிலுள்ள அனைத்து ஆசிரியர் சமூகத்தையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக தரம் உயர்த்தி, ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்பு தகுதியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில், கல்வி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, விசேட குழு ஒன்றை நியமிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
15 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
28 minute ago
37 minute ago