Editorial / 2021 ஜனவரி 06 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளின் 2ஆம் தரத்திலிருந்து 13ஆம் தரம் வரையான சகல வகுப்புகளும் இந்த மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கல்வி அமைச்சின் செயலாளரால் நேற்று (05) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஆரம்பிப்பதற்கு முன்னர் முன்பள்ளிகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தல், சுகாதார பாதுகாப்பை உரியமுறையில் முன்னெடுத்து செல்லல் என்பன அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுக்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர்களுக்கான ஆலோசனைகள்
பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னரான தயார்படுத்தல் தொடர்பில் அதிபர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
• 6,7,8,9 மற்றும் 10ஆம் திகதிகளில் சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளின் கீழ் வரையறுக்கப்பட்ட பெற்றோர் மற்றும் பழைய மாணவர் சங்க மாணவர்களின் பங்குபற்றலுடன் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை முழுமையாக ஆரம்பிக்க வேண்டும்.
• இந்த நடவடிக்கை குறித்து பாடசாலை சமூகத்தின் அபிப்ராயம், ஆலோசனைகளைப் பெற்று தேவையான திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும்.
• பாடசாலைக்கு வருகைத் தந்ததன் பின்னர் மாணவர்கள் கட்டாயமாக முகக் கசவத்தைப் பயன்படுத்தல், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு முகக் கவசங்களை அணிந்திருப்பதில் அசௌகரியம் ஏற்பட்டால் சமூக இடைவெளியைப் பின்பற்றி பாதுகாப்பான சந்தர்ப்பங்களில் முகக் கவசங்களை அணியாமலிருக்க அனுமதி வழங்கல்
• பாடசாலைக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல், தேவையான சந்தரிப்பத்தில் வகுப்பறைக்குள் உடல் வெப்பத்தை பரிசோதித்தல்
• மாணவர்களை ஒன்று கூடுவதை தடுத்தல் மற்றும் வகுப்பறைக்குள்ளே ஓய்வெடுக்க ஏற்பாடு செய்தல்
• வீடுகளிலிருந்து கொண்டு வரும் உணவு, குடிநீரை ஏனையவர்களுக்கு வழங்குவதைத் தடுத்தல்
பெற்றோருக்கானது
• இருமல், சளி, காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்த்தல்
• வீட்டில் யாராவது ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அவ்வீட்டிலுள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாமலிருத்தல்
• தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலிருந்து ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பாதிருத்தல்
• தமது பிள்ளைகள் பயன்படுத்தும் பாடசாலை புத்தகப் பை உள்ளிட்ட அனைத்தும் சுத்தம் செய்தல் அல்லது வெயிலில் காயவைத்தல்
மாணவர்களுக்குரியது
மாணவர்களுக்கான சில ஆலோசனைகளையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
வகுப்பறைகளிலிருந்து வெளியே சென்று மீண்டும் வரும் வரை எந்தவொரு காரணத்துக்காகவும் பாடசாலையிலுள்ள அநாவசிய பொருள்களைத் தொடக்கூடாது.
தொட்டால் கைகளைக் கழுவ நடவடிக்கை எடுத்தல்
உணவு, தண்ணீர் போத்தல்களை பரிமாறிக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
பாடசாலைக்குள் அல்லது வெளியே குழுவாக கூடி நிற்பதை தவிர்க்க வேண்டும்.
பாடசாலை நிறைவடைந்தவுடனே வீட்டுக்குச் செல்லல்
பாடசாலைக்குச் செல்லும் போது, வீட்டுக்கு திரும்பும் போது பொது அல்லது தனியார் வாகனத்தைப் பயன்படுத்தும் போதுஇ சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றல்
இதேவேளை நேற்று முன்தினம் அறிக்கையொன்றை வெளியிட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் தவிர்ந்த மேல் மாகாணத்திலுள்ள ஏனைய பாடசாலைகளின் 11ஆம் தர மாணவர்களுக்கு மாத்திரம் 25ஆம் திகதி கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026