2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கலைஞர் நந்தசிறியின் இறுதிக் கிரியை இன்று

George   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மூத்த நடிகரும் பிரபல நாடகத்துறைக் கலைஞருமான விஜய நந்தசிறியின் இறுதி கிரியை இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சமய கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 4.15 மணிக்கு பூதவுடல், வீட்டிலிருந்து கொண்டு செல்லப்படும்.

தெஹிவளை - கல்கிசை பொது மையானத்தில் அவரது உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது, அவரது உடல், கல்கிசை தேவாலய வீதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு பெருமளவான திரை நட்சத்திரங்கள், நந்தசிறியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

விஜய நந்தசிறி, திங்கட்கிழமை (08) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 72 ஆகும்.
திடீர் சுகவீனமுற்ற அவர், களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்திருந்தார்.

'மனமே' என்ற மேடை நாடகத்தின் மூலம் தனது முழுமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய அவர், நடிகர், மேடைப் பேச்சாளர் மற்றும் பாடகர் என்ற பன்முகத் திறமைகளைக் கொண்டு திகழ்ந்தார்.

1944ஆம் ஆண்டில் பிறந்த இவர், மஹரகம வித்தியாகார வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். நடிகை தேவிகா மிஹிராணியின் கணவரான நந்தசிறி, இரு பிள்ளைகளின் தந்தையுமானார்.

இவரது நடிப்பில் வெளியான, நோனாவருனி மஹத்வருனி, இயஸ் பொஸ், எத்துமா - மெத்துமா, சிக்குரு ஹத்தே, சுஹத கொக்கா போன்ற நகைச்சுவை நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள், மிகவும் பிரபல்யமானவை.

1966ஆம் ஆண்டில், அமரதாச குணவர்தனவின் 'விதுர திவ' என்ற மேடை நாடகம் மூலம், நடிப்புத் துறைக்குள் பிரவேசித்த இவர், சிங்கபாஹு, மஹாசரா, நரிபேனா, ஜசயா சஹா லென்சினா, ரத்னாவலி, தாராவோ இகில்லெதி, ஹுனுவட்டயே கதாவ, குவேனி, வ்ருஷுப ரஜா, சுக சஹா யச, குச பபாவதி உள்ளிட்ட 40க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .