2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கல்லில் எழுதியது அல்ல பட்ஜெட்

Thipaan   / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் சமர்ப்பித்த 2015ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம், மாற்றமுடியாத வகையில் கல்லில் எழுதப்பட்ட ஒன்றல்ல என்று, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க ஒரு தீவிரவாதியல்ல, நெகிழ்வுப் போக்கான அடிப்படையிலேயே 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டது. அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறைக்கப்படாது, அதேபோல, நிவாரணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் குறைக்கப்படாது என்றார்.

என்னால் சமர்பிக்கப்பட்ட இத்திட்டமானது, கல்லில் எழுதப்பட்டதொன்றல்ல என்பதனால் அதில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X