2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை

’கிளப் வசந்த’வின் மனைவியிடம் துப்பாக்கி

Editorial   / 2024 ஜூலை 10 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரிய ஒருவல சந்தியில்  திங்கட்கிழமை (08) பிற்பகல் வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகரான 'கிளப் வசந்த' என்றழைக்கப்படும் உரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டார். அவருடன் மற்றுமொருவரும் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 'கிளப் வசந்த'வின் மனைவியிடம் அனுமதிப்பெற்றுக்கொள்ளாத சட்டவிரோதமான துப்பாக்கி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத துப்பாக்கி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

மிரிஹானவில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து​கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .