2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கள்ளக்காதலனிடமும் மகளின் காதலனுடனும் அவ்வப்போது உல்லாசம்: கணவனை மாட்டி விட்ட பரிதாபம்

Editorial   / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

  
 

தன்னுடைய கள்ளக்காதலனிடமும் மகளின் காதலனுடனும் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்த 44 வயதான பெண், தன்னுடைய கணவனை பொலிஸில் மாட்டிவிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 
 
மராட்டிய மாநிலம் மும்பை கோரேகான் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மாநகராட்சி அலுவலகத்தில் நீர் வழங்கல் துறையில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி (ஊர்மிளா வயது 44). இந்த தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகள் உள்ளார்.ஊர்மிளாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் வாலிபரை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பாராம்.
 
 மேலும் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு கள்ள காதலை வளர்த்து வந்தார். இது ஒரு புறம் இருக்க அவருடைய மகளின் காதலன் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது ஊர்மிளாவுக்கு மகளின் காதலனுடனும் பழக்கம் ஏற்பட்டு கள்ள தொடர்பாக மாறியது. மகள் வீட்டில் இல்லாத நேரத்தில் மகளின் காதலனுடன் ஊர்மிளா உல்லாசமாக இருப்பாராம்.

மகளின் காதலனுடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் ஊர்மிளா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார். இதற்காக வீட்டில் இருந்த நகைகளை விற்று ரூ.10 லட்சத்தை அவருடைய காதலனின் வங்கி கணக்கிற்கு மாற்றினார்.


மேலும் வீட்டில் இருந்த நகை ஒன்றை அவருடைய மகளின் காதலனுக்கு கொடுத்தார். 2 காதலர்களுக்கு நகைகளை விற்று கொடுத்து விட்டதால் கணவரிடம் மாட்டிக்கொள்வோம் என ஊர்மிளாவுக்கு பயம் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து நகைகளை திருடியதாக அவருடைய அப்பாவி கணவர் மீது பழி சுமத்தினார். அவருடைய கணவர் ரமேஷ் தான் நகைகளை எடுக்கவில்லை என மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார்.


ஆனால் ஊர்மிளா அங்குள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று வீட்டில் இருந்த நகைகளை தனது கணவர் திருடி விட்டதாக புகார் அளித்தார். பொலிஸார் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர்.அப்போதில் வீட்டில் திருடு போனதற்கான எந்த விதமான அறிகுறியும் இல்லை. சந்தேகம் அடைந்த பொலிஸார் ஊர்மிளா மற்றும் அவருடைய கணவரின் செல்போன்களை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது ஊர்மிளா வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவருடைய மகளின் காதலனுடன் அடிக்கடி பேசி வந்ததை பொலிஸார் கண்டறிந்தனர்.


இதுகுறித்து ஊர்மிளாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது காதலனுடன் தலைமறைவாக திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் ஊர்மிளா மற்றும் அவருடைய மகளின் காதலனை கைது செய்தனர். மேலும் அவருடைய மற்றொரு காதலன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .