2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கள்ளுத்தவறணையில் ஒருவர் அடித்து கொலை

Freelancer   / 2025 நவம்பர் 21 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (20) மாலை புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்றில் கள்ளு அருந்துவதற்கு சென்ற நிலையில் தவறணையில் கள்ளு அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர், குறித்த குடும்பஸ்தரை தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X