Editorial / 2021 ஜனவரி 07 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய இருதயவியல் பிரிவு ஆய்வகத்துக்குத் தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவில் உள்ள குறைபாடுகளைப் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
இதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவுக்கான உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார அமைச்சருக்கு, பிரதமர் பணிப்புரை விடுத்திருந்தார்.
எனினும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரு கிழமைகளில் கிடைக்கவிருந்த வைத்திய உபகரணங்களை இடைநிறுத்தி, அவற்றை களுத்துறை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றியனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனை அறிந்துகொண்ட இவ்விரு எம்.பிகளும், பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். இதையடுத்து உடனடியாக அதிகாரியை அழைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அந்த உபகரணங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தனர்.
'கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு வைத்தியசாலையிலும் இருதயவியல் பிரிவுக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை. இதனால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்' என சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ளார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026