Editorial / 2023 மே 09 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

களுத்துறையில் உள்ள மகளீர் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்விப்பயிலும் 16 வயதான பாடசாலை மாணவியான டிஹாரா நிர்மானி நிஷங்க சில்வா என்ற யுவதி ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமான சம்பவம் தொடர்பில் தேடிக்கொண்டிருந்த பிரதான சந்தேகநபர் களுத்துறை தெற்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை இசுரு உயனவைச் சேர்ந்த 29 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், காலி பிரதேசத்தில் மறைந்திருப்பதாக களுத்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய, குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தம்மிக்க சில்வாவின் தலைமையிலான குழுவினர் காலி பிரதேசத்துக்குச் சென்று இன்று (09) அதிகாலை இந்த சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டனர்.
சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவல் கட்டளை பெற்றுக்கொள்ளவிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago