Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Freelancer / 2023 மே 30 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவியே காணாமல் போயுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறியதுடன் மீண்டும் வீட்டிற்கு வருகைத்தரவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் கையடக்க தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் மாணவி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago