Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஜூலை 02 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தை அடுத்த கொங்கல்நகரம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சபரீஸ்வரன் (வயது 35). கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தாயார் மற்றும் பாட்டியுடன் கொங்கல்நகரத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சபரீஸ்வரன் கதவு இல்லாத வீட்டில் படுத்து தூங்கினார். அருகிலுள்ள வீட்டில் அவருடைய தாயார் மற்றும் பாட்டி படுத்து தூங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்த போது சபரீஸ்வரன் கழுத்து உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதை பார்த்து அவரது தாயாரும், பாட்டியும் அதிர்ச்சியடைந்து அலறித்துடித்தனர்.
இது குறித்து குடிமங்கலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து சபரீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு பொலிஸ் மோப்ப நாய் டெவில் வரவழைக்கப்பட்டது. அது அந்த பகுதியில் சிறிது தூரம் ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இந்த கொலை குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சபரீஸ்வரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த கணவனைப் பிரிந்து வாழும் பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதே பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலு என்ற பாலமுருகன் வசித்து வந்துள்ளார். இவர் மரம் வெட்டும் வேலை பார்ப்பதுடன், ஆட்டோ டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார். இவரும் சபரீஸ்வரன் தொடர்பு வைத்துள்ள பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளார்.
இவர் முக்கூடல் ஜல்லிபட்டிக்கு இடம் பெயர்ந்தாலும் தனது தகாத உறவை அந்த பெண்ணுடன் தொடர்ந்து வந்துள்ளார். இதனால் சபரீஸ்வரனுக்கும் பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் இரவு மதுபோதையில் பாலமுருகன் மற்றும் சபரீஸ்வரன் இருவரும் சண்டையிட்டுள்ளனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சபரீஸ்வரன் கதவு இல்லாத வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவில் சிலருடன் வந்த பாலமுருகன் போதையில் தூங்கிக் கொண்டிருந்த சபரீஸ்வரனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து கொலையாளி பாலமுருகன் மற்றும் கூட்டாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை பொலிஸார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
27 minute ago
9 hours ago
03 Jul 2025