2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் விபத்தில் மரணம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை  அனுராதபுர  சந்தி  விபுலானந்த  பாடசாலைக்கு  முன்னால்  உள்ள  பாதசாரி  கடவையில்  இடம்பெற்ற  விபத்தில்  தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பின்  முன்னாள்  கிழக்கு  மாகாண  சபை  உறுப்பினர்  கு.நாகேஸ்வரன் (வயது 71) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூதூர்,சம்பூரில் இருந்து  திருகோணமலை  நகரில்  மரணச்  சடங்கு  ஒன்றுக்கு  பஸ்ஸில்  வருகை  தந்து, பாதசாரிகள்  கடவையின்  ஊடாக  வீதியைக் கடக்க  முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண் ஒருவர்  இவர்  மீது  மோதியதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின்  சடலம்  திருகோணமலை  பொது  வைத்தியசாலை  பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து  தொடர்பான  மேலதிக  விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.கீதபொன்கலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .