Freelancer / 2026 ஜனவரி 30 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் 78ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் மற்றும் அதற்கான பயிற்சிகள் காரணமாக, கொழும்பு நகரில் இன்று (30) முதல் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின ஒத்திகைகள் நடைபெறும் கீழ்க்கண்ட நாட்களில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
இன்று (30), நாளை (31) மற்றும் பெப்ரவரி 02 ஆகிய தினங்களில் காலை 7.45 மணி முதல் மதியம் 1.30 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
பெப்ரவரி 01 அன்று அதிகாலை 5.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி முதல் விழா நிறைவடையும் வரை சுதந்திர சதுக்கத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
சுதந்திர சதுக்கத்தை சூழவுள்ள பிரதான வீதிகளில் இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. எனவே, இந்த நேரப்பகுதிகளில் கொழும்பு நகருக்குள் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். (a)
6 minute ago
20 minute ago
26 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
26 minute ago
30 minute ago