2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர்

Freelancer   / 2025 மே 23 , பி.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் இந்திக மகேஸ் கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. 

பேராசிரியர் இந்திக மகேஸ் கருணாதிலக 2000ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ளதுடன், கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லண்ட் டண்டீ பல்கலைக்கழகங்களில் (University of Dundee) பட்டம் பெற்றவராவார். 

இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் 20 ஆவது உபவேந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .