Editorial / 2025 ஜூன் 16 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபைக்கான மேயரை தெரிவு செய்வதற்காக, இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை மேயருக்காக தேசிய மக்கள் சக்தி சார்பில் வ்ராய் கெலீ பல்தசாரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரீஸா சரூக் போட்டியிடுகின்றனர். 117 உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களிக்கின்றனர்.
இதேவேளை, மேயர் தெரிவுக்காக வழங்கப்பட்ட வாக்குச்சீட்டு சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் மாத்திரம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக சபையில் சர்ச்சை எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
மேயராக தெரிவாகி ஆட்சியை ஸ்தாபித்து ஆதிகாரத்தை உறுதிப்படுத்த 59 ஆசனங்கள் தேவைப்படுகின்றது. இதன் பிரகாரம் ஆட்சி அமைப்பதற்கு 59 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடியாதுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு மொத்தமாக 117 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் தேசிய மக்கள் சக்திக்கு 48 ஆசனங்களும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு 29 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றன. ஏனைய கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு மொத்தமாக 40 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்நிலையில், தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


3 minute ago
7 minute ago
16 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 minute ago
16 minute ago
21 minute ago