2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கழுத்தில் பாய்ந்த கூரிய தடி : வெற்றிகரமாக அகற்றம்

Mayu   / 2024 டிசெம்பர் 25 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூரிய தடி ஒன்று கழுத்தில் குத்தி கழுத்தை ஊடறுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், வைத்தியர்களால் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால்  கூரிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் காப்பாற்றப்பட்டார். 

குறித்த சத்திரசிகிச்சை செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது.  

முதியவர், உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,   விரைவாக முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சை மூலம் அவரது கழுத்தில் இருந்து  தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார். 

இவ் வெற்றிகரமான சத்திரசிகிச்சை உணர்வழியியல் மருத்துவ நிபுணர் நாகேஸ்வரன் தலைமையிலான மயக்க மருந்து (Anesthesia) அணியினருடன் இணைந்து

சத்திரசிகிச்சை நிபுணர் ரஜீவ் நிர்மலசிங்கம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X