Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 08 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தால் டுபாய், மாலத்தீவை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் லட்சத்தீவு ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹாலிவுட் திரைப்பட பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் புத்தாண்டு, பண்டிகைகள், பிறந்த நாள், திருமண நாளை உலகின் பிரபல சுற்றுலா தலங்களில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரம் பிரபலங்களில் முதல் விருப்பத் தேர்வாக இருந்து வந்தது.
மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடிகர், நடிகைகளும் அண்டை நாடான மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக மாலத்தீவு உலகின் பிரபல சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது.
இந் நிலையில் பிரதமர் மோடி அண்மையில் லட்சத்தீவுக்கு அரசு முறை பயணமாக சென்றார். அப்போது அந்த தீவின் அழகிய கடற்கரைகள், சாகச பொழுதுப்போக்கு தொடர்பான வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ, புகைப்படங்கள் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வியாபித்து பரவி வருகிறது.
கடந்த இரு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் பிரபல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பிரதமர் மோடியின் வீடியோ, புகைப்படங்களை ‘லைக்' செய்துள்ளனர்.
இந்தியாவில் கோவா கடற்கரை சர்வதேச சுற்றுலா பயணிகளின் விருப்பத் தேர்வாக உள்ளது. தற்போதைய சூழலில் துபாய், மாலத்தீவு, கோவா கடற்கரைகளை பின்னுக்குத் தள்ளி கேரளா அருகேயுள்ள லட்சத்தீவு ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
13 Jul 2025
13 Jul 2025
13 Jul 2025