Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நபரை, கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், கைதுசெய்யப்பட்ட மன்னார் உதவிப் பொலிஸ் அதிகாரி உபுல் அலவத்த, எதிர்வரும் 11ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் ருச்சிர வெலிவத்த, நேற்று (02) மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் செய்த முறைப்பாட்டுக்கமைய, மன்னார் உதவிப் பொலிஸ் அதிகாரி (ஏ.எஸ்.பி) உபுல் அலவத்த, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (சி.ஐ.டி), நேற்று முன்தினம் (01) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரின் வீட்டில் கடமையாற்றிய பணியாளரை, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து, பொலிஸ் தடுப்பிலிருந்தபோது, கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே, அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த உதவிப் பொலிஸ் அதிகாரியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பதவிவகித்த மாகவிட கமகே தென் ஹெரி என்பவரின் வீட்டில் பணியாளராகக் கடமையாற்றிய அஜித் சுனந்த கண்டம்பி, கடந்த 2008 டிசெம்பர் 31ஆம் திகதி, பிலியந்தலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்து போது, கடத்திச் சென்று காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலே, மேற்படி உதவிப் பொலிஸ் அதிகாரி, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில், பிலியந்தலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக, மேற்படி அதிகாரி சேவையாற்றினார் என, விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளதென, குற்றப்புலனாய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில், கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தின் கீழ் விசாரணையிலிருந்த நீதவான் விசாரணையின் பிரகாரம், அன்று பிலியந்தலை பொலிஸ் சேவையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் ஐவர், இந்தச் சம்பவத்தின் முறைப்பாட்டாளரான மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவவர் உள்ளிட்ட ஏழு பேர், இரகசியப் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
53 minute ago
3 hours ago
4 hours ago