2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காணாமல் போனோர் அலுவலகத்தின் அடுத்த மக்கள் சந்திப்பு கொழும்பில்

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கமல் 

 

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அடுத்த மக்கள் சந்திப்பு, கொழும்பில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது.  

மேல்மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பை, கொழும்பில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள லக்‌ஷ்மன் கதிர்காமர் சர்வதேசக் கற்கைகளுக்கான நிலையத்தில், குறித்த சந்திப்பு நடத்தப்பவுடவுள்ளதெனவும், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் 7ஆவது மக்கள் சந்திப்பு இதுவெனவும் அறிய முடிகிறது.  

இதன்போது, மேல் மாகாணத்துக்குள் காணாமல் போனோர், காணாமல் போன சந்தர்ப்பம், திகதி என்பன குறித்த தரவுகள் திரட்டப்படவுள்ளனவெனவும் அவர் குறிப்பிட்டார். 

நாட்டில் இடம்பெற்ற யுத்தம், ஏனைய கலவர நிலைமைகளின் போது காணாமல் போனோர், ஆக்கப்பட்டோர் பற்றிய தரவுகளைத் திரட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்தும் வரும் நிலையிலேயே,குறித்த அலுவலகத்தின் அடுத்த பொதுமக்கள் சந்திப்பு, கொழும்பில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X