S.Renuka / 2026 பெப்ரவரி 23 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவீன டேட்டிங் செயலிகள் மற்றும் லிவ்-இன் உறவுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தான பக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
திரிபுராவைச் சேர்ந்த 19 வயது மாணவி, குருகிராமில் தங்கி பிஎஸ்சி பயோ டெக்னாலஜி படித்து வந்துள்ளார்.
ஒன்லைன் டேட்டிங் செயலி மூலம் டெல்லி நரேலாவைச் சேர்ந்த சிவம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணம் செய்துகொள்வதாகச் சிவம் அளித்த வாக்குறுதியை நம்பி, இருவரும் குருகிராமில் தனியாக வீடு எடுத்து லிவ்-இன் உறவில் இருந்து வந்துள்ளனர்.
பெப்ரவரி 16 அன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், சிவம் அந்தப் பெண்ணைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
வக்கிரத்தின் உச்சமாக, அந்தப் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் சானிடைசரை ஊற்றித் தீ வைத்ததுடன், அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். உயிருக்குப் போராடிய மாணவி தனது தாய்க்குத் தகவல் அளிக்க, பொலிஸார் விரைந்து சென்று அவரை மீட்டுள்ளனர்.
குற்றவாளி சிவத்தைக் கைது செய்துள்ள பொலிஸார், அவர் மீது பின்வரும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்:
பிரிவு 69: திருமணம் என்ற பெயரில் உடலுறவு வைத்துக் கொள்ளுதல். பிரிவு 118 (1): ஆபத்தான ஆயுதம் கொண்டு தாக்குதல். பிரிவு 115 (2) & 351 (2): காயப்படுத்துதல் மற்றும் மிரட்டல் விடுத்தல். பிரிவு 127 (7): சட்டவிரோதமாகச் சிறை வைத்தல்.
மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் சிவம் மீது கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்படும் என பொலிஸார் உறுதி அளித்துள்ளனர்.
10 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
41 minute ago
1 hours ago