Janu / 2026 ஏப்ரல் 22 , பி.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்னிபிட்டிய பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மதிலால் பாய்ந்து, சட்டவிரோதமான முறையில் உள் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவரின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் சிலர், பாடசாலை மைதானத்தின் ஒரு பகுதியில் இருந்த மரத்தில் மாம்பழம் பறித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது அருகிலுள்ள வீட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்கு வந்து மாணவர்களை திட்டியுள்ளார். அதற்குப் பதிலடியாக மாணவர்கள் அந்த இளைஞரை பார்த்து "ஹூ" என சத்தமிட்டு கேலி செய்துவிட்டு பாடசாலை கட்டிடத்திற்குள் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாடசாலையின் மதிலால் பாய்ந்து உள்ளே நுழைந்த குறித்த இளைஞன், அங்கிருந்த இரண்டு மாணவர்களை பிடித்து அவர்களின் கழுத்தில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தை வைத்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து குறித்த பாடசாலையின் பிரதி அதிபரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
20 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
51 minute ago