Editorial / 2026 ஏப்ரல் 23 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

“கட்சி சேரா”, “ஆச கூட” போன்ற தனிப்பாடல்கள் (Album Songs) மூலம் புகழ்பெற்றவர் சாய் அபயங்கர். இந்தப் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவர் இசையமைப்பில் வெளியான முதல் படமான ‘டியூட்’ நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து ‘கருப்பு’, ‘மார்ஷல்’, அட்லி தயாரிப்பில் உருவாகும் ‘ராக்கா’ மற்றும் விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் திரையுலகில் புதுமையான இசை மொழியால் வேகமாக உயர்ந்து வரும் இசையமைப்பாளராகச் சாய் அபயங்கர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்:
“என்னிடம் 1,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. ஆறாம் வகுப்பில் இருந்தே நான் இவற்றை இயற்றி வருகிறேன். 60 வயதிற்குப் பிறகு என் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அந்தப் பாடல்களைப் பயன்படுத்துவேன். 1,000 பாடல்களையும் பயன்படுத்துவேன் என்று சொல்லவில்லை; அவற்றுள் எது சிறந்ததோ அதை மட்டும் பயன்படுத்துவேன்.
மேலும், சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பதற்காக நான் ஒரு சாதாரண ‘நோக்கியா’ செல்போனைப் பயன்படுத்துகிறேன். சமூக ஊடகங்களில் நமக்குத் தேவையான தகவல்களும் உள்ளன, தேவையில்லாதவையும் உள்ளன. அதனால்தான் சாதாரண போனைப் பயன்படுத்துகிறேன். இதில்தான் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் என்னை அழைக்கின்றனர். பெரும்பாலும் ஸ்மார்ட்போனில் இருந்து விலகியே இருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
5 minute ago
20 minute ago
25 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
25 minute ago
31 minute ago