2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

பலகாரம் சுட்ட பெண் மரணம்

Janu   / 2026 ஏப்ரல் 23 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை வீதி, 5ஆம் கட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில், சித்திரை புத்தாண்டுக்கு முந்தைய தினமான 13ஆம் திகதி பலகாரம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவர், கடாயில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) இரவு உயிரிழந்துள்ளார்.

44 வயதுடைய ஏ.எம். கருணாவதி என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் பலகாரம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென எண்ணெய் சட்டியில் (தாச்சியில்) தீப்பிடித்து அவரது உடலில் பரவியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், முதலில் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமனசிறி குணதிலக்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .