Editorial / 2025 செப்டெம்பர் 14 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது பிரிந்த காதலியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சென்ற காதலன், அவரது முகத்தை பார்த்து பரிதாபப்பட்டு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்ற சம்பவமொன்று கோவிந்தபுரம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம், கோவிந்துபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தம ரிதிகஹவத்தே பகுதியில், கடந்த 11 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது.
புத்தம ரிதிகஹவத்தயைச் சேர்ந்த 24 வயது பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனுடன் உறவில் இருந்ததாகவும், இருவரும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து விட்டதாகவும் கோவிந்தபுரம் பொலிஸ் தெரிவித்துள்ளது.
அந்த பெண், தற்போது மொனராகலை நகரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். அவர் வேறொரு இளைஞனுடன் உறவில் இருப்பதாக கேள்விப்பட்ட அவரது முன்னாள் காதலன், அப்பெண்ணின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டார்.
அந்த பெண், வீதியைக் கடந்து ஆடைத் தொழிற்சாலையில் பேருந்தை பிடிக்க தனது வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்த போது, அவளை சுட முயன்றார். அவரது முகத்தை பார்த்து பரிதாபப்பட்டு, பின்னர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.
கோவிந்தபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம். கருணா சாந்த, அவரைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025