2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

காதல் விவகாரம் : கழுத்து அறுக்கப்பட்ட பெண்

Freelancer   / 2025 ஏப்ரல் 19 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18) பகல் 33 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் குறித்த  பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X